#தமிழகம் || தலைதுண்டிக்கப்பட்டு கொடூர கொலை - போராட்டத்தில் குதித்த விசிக.! குற்றவாளிகள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் : நல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட செரங்காடு பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் திருச்சி - ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என தெரியவந்தது. ரஞ்சித் அளித்த தகவலின்படி, அவருடைய நண்பர் கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை காட்டுப் பகுதியில் வைத்து சிலர் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி கொண்டிருப்பதாகவும் ரஞ்சித் தெரிவித்தார்.

அந்த காட்டுப்பகுதியில் சென்று தேடியபோது, அங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சதீஷ் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து சதீஷின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில், சதீஷ்-ன் துண்டிக்கப்பட்ட தலை கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, திருப்பூர் மாநகர் போலீசார் தரப்பில் 3 தனிப்படைகள் அமைத்து சதீஷின் தலையை தேடும் பணியையும், இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி நபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ் துண்டிக்கப்பட்ட தலையானது திருப்பூரில் ஒரு குப்பை தொட்டியில் கண்டெக்கப்பட்டது.  மேலும், இந்த கொலை சம்பந்தமாக மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த ராம்குமார் (25 வயது), சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த சுபா பிரகாஸ்(23வயது), மதுரையை மணிகண்டன் (25வயது), திருப்பூர் கரட்டங்காடை சேர்ந்த சதீஷ்குமார் (24வயது) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது.

கொலை நடந்த அன்று, சதீஷும், அவரது நண்பர் ரஞ்சித்தும் மது அருந்தினர். அப்போது ராம்குமார் உள்ளிட்ட 5 பேரும் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். இருதரப்பும் போதையில் சண்டையிட்டுக்கொண்டுள்ளனர். அப்போது, ராம்குமார் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து சதீஷையும், ரஞ்சித்தையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். சதீஷ் தலையை மட்டும் துண்டித்து கொலை செய்துள்ளனர். கைது செய்யபர்ட்ட கொலையாளிகளிடம் போலீசார் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சதீஷ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி, இழப்பீடு வழங்கவேண்டும் என்று, திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், குற்றவாளிகள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிய வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kumbakonam murder case issue vck protest


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->