ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஈபிஎஸ் வேட்பாளர் தென்னரசு திடீர் ராஜினாமா.. காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சி சார்பில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், நாம் தமிழர், தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றனர்.

அதேபோன்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிட உள்ளதாக அறிவித்த நிலையில் ஈபிஎஸ் தரப்பினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இதில், ஈபிஎஸ் அணி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் தென்னரசு களமிறக்கப்பட்டுள்ளார்.

இதில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஏற்கனவே 2 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக இருக்கிறார்.

மேலும், கே.எஸ்.தென்னரசு தமிழ்நாடு துணிநூல் பதனிடும் ஆலை நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார். இது அரசு பதவி என்பதால் அதை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். 

இந்த நிலையில் தமிழ்நாடு துணிநூல் பதனிடும் ஆலை நிறுவனத்தின் தலைவர் பதவியை நேற்று கே.எஸ்.தென்னரசு ராஜினாமா செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KS Thennarasu resigned as the chairman of Tamil Nadu Textile Mills


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->