திராவிட முட்டாள்களே.! உங்க தலைவரும் ஒரு நடிகராக தோல்வியுற்றவர் தான்.!! குஷ்பு தந்த பதிலடி.!! - Seithipunal
Seithipunal


சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைமை நிலை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான நடிகை குஷ்பு குறித்து ஆபாசமான வார்த்தைகளால் அவதூறான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு திமுகவையும் அதன் தலைவர் மு.க ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்ததோடு கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தார். குஷ்பூ பேட்டியளித்த சிறுமணி நேரத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவிலிருந்து நிரந்தரமாக அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார் 5 பிரிவுகளின் கீழ வழக்கு பதிவு செய்ததோடு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பு கிளப்பிய நிலையில் சமூக வலைதளங்களில் நடிகை குஷ்புவுக்கு எதிராக திமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். மேலும் அவர் ஒரு நடிகை என்பதை குறிப்பிட்டு பலர் அநாகரிகமான கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் "ஐயோ திராவிட முட்டாள்களே! உங்களையும், கட்சியைக் கட்டியெழுப்ப தன் உயிரைக் கொடுத்த மாபெரும் தலைவர் கலைஞர் அவர்களையும் கேலி செய்வதை நிறுத்துங்கள்.

நீங்கள் பழிவாங்கும் எண்ணமும் வெறுப்பும் நிறைந்தவர் என்பது எனக்குத் தெரியும். நான் உங்கள் கட்சியில் இருந்தபோதும் நடிகையாக இருந்தேன். அதனால் நான் நடிகை என்று கூறி என்னை ட்ரோல் செய்ய முயல்வது என் காதில் விழுந்தது.

உங்களை விட பலமான தோள்கள் என்னிடம் உள்ளன. அவை சுயமாக உருவாக்கிக் கொண்டவை. உங்கள் தோள்களைப் போல பிச்சை போட்டதால் வளர்ந்தது அல்ல. உங்கள் பெயரை என்னுடைய பெயருடன் இணைத்தால் மட்டுமே செய்தியாக முடியும் என்ற உங்கள் அவலநிலை எனக்குப் புரிகிறது. ஆனால் எங்கள் முதல்வர், உங்கள் தலைவரும் ஒரு நடிகர் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அதில் தோல்வியுற்றவர். என்ன பரிதாபம்!" என பதிலடி தந்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Khushbu response to DMK criticism of being an actress


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->