கதவுக்கு பின்னால் இருந்து ரசிக்கிறீர்களா.. திருப்பி அடித்தால் தாங்க மாட்டீங்க..!! மு.க ஸ்டாலினை விளாசிய குஷ்பூ..! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வட சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் திமுகவை சேர்ந்த தலைமை நிலை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பாஜக செயற்குழு உறுப்பினரும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான நடிகை குஷ்பூ மற்றும் தமிழக ஆளுநர் ரவி குறித்து ஆபாச வார்த்தைகளால் பேசி இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ பேசியதாவது "திமுகவைச் சேர்ந்த மூன்றாம் கட்ட பேச்சாளர் என்னை பற்றி நேற்று மிகவும் தரகுறைவாக பேசி உள்ளார். ஏற்கனவே பெண்களைப் பற்றி ஆபாசமாக பேசியதற்காக திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் கெஞ்சி, கூத்தாடி கட்சியில் சேர்ந்து நேற்று மீண்டும் அதே போன்று பேசியுள்ளார். இதற்கு முன்பு நான் மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இல்லாத போது திமுகவைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் என்னை பற்றி தரக்குறைவாக பேசி உள்ளார்.

அவர் மீது தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததால் டெல்லிக்கு சென்று இனி என்னைப் பற்றியும் மற்ற பெண்களைப் பற்றியும் தவறாக பேச மாட்டேன் என மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார். பெண்களைப் பற்றி இழிவாக பேசுவது தான் புதிய திராவிட மாடல் என்பதை நான் தற்பொழுது புரிந்து கொண்டேன். அதனால்தான் இதைப் பற்றி நான் பேச வேண்டாம் என நினைத்தேன். ஆனால் தற்பொழுது ஒரு மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக தேசத்தின் உறுப்பினராக நான் இருக்கும் பொழுது என்னைப் பற்றி இப்படி கேவலமாக பேசுவதை போனால் போகுது என விட்டுவிட்டால் பொதுவான பெண்களுக்கு எங்கள் மீது சந்தேகம் எழக்கூடும்.

பெண்களைப் பற்றி அவதூறாகவும் இழிவாகவும் பேசுவதற்கு யாருக்குமே உரிமை கிடையாது. மகளிர் ஆணையத்தில் இருக்கும் குஷ்பூவுக்கு இந்த நிலை என்றால் சாலையில் செல்லும் பொதுவான பெண்கள் பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்பதை நினைத்து பாருங்கள்.

அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அதற்கு நீங்கள் பதில் தர வேண்டும். ஒரு பாஜக உறுப்பினராக நான் உங்களை பார்த்து கேள்வி எழுப்பினால் அதற்கு நீங்கள் பதில் தர வேண்டும். ஆனால் அதற்கு உங்களிடம் பதில் இல்லை. திமுகவில் இருக்கும் அனைவரும் செந்தில் பாலாஜி விவகாரத்தில் பயந்து கொண்டு இருக்கிறார்கள். அதற்கு வேறு வழி இல்லாமல் பெண்களை தரை குறைவாக பேசுகின்றனர்.

இதுதான் புதிய திராவிட மாடல். எனக்கு இவர்கள் மீது சந்தேகம் எழுகிறது. இவர்களே இது போன்ற பேச்சாளர்களை தீனி போட்டு வளர்த்துவிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட அனைவரும் கதவுக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டு சிரித்துக் கொண்டு இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இவர்களே தீனி போட்டு வளர்ப்பதால் தான் இது போன்ற பேச்சாளர்களுக்கு தைரியம் வருகிறது. இதுவே திமுகவைச் சேர்ந்தவர்கள் பற்றி பேசினால் வீட்டின் மீது கல் வீசவும், கோஷம் போடவும் வந்து விடுவார்கள்.

எங்கே இருந்தாலும் புடவை பிடிச்சு இழுப்பது. இதை நான் பார்த்திருக்கேன், நடந்திருக்கு, அனுப்பப்பட்டிருக்கிறேன். அதன் அடிப்படையில் சொல்கிறேன். இனி திமுகவைச் சேர்ந்தவர்கள் என்னைப் பற்றி மட்டுமல்ல எந்த ஒரு பெண்ணை பற்றி பேசினாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்பதை மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக தெரிவித்துக் கொள்கிறேன். திமுக தலைவர் மு.க ஸ்டாலினை பார்த்து நேரடியாக சொல்கிறேன். குஷ்புவை சீண்டி பார்க்காதீர்கள். திருப்பி அடித்தால் தாங்க மாட்டீங்க. என்னைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். குஷ்பு தானே மறந்து விடுவா என நினைக்காதீங்க. குஷ்பு மன்னிப்பா ஆனா மறக்க மாட்டா. 

மு.க ஸ்டாலின் கண்ணை பார்த்து பேசக்கூடிய தைரியம் எனக்கு இருக்கு. உங்கள் கட்சியில் சேரும்போது உங்கள் தந்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்னிடம் சொன்ன விஷயம் "மேடை நாகரிகம் என்று உள்ளது அதை எப்போதும் பார்த்துக்கோங்க". உங்க கட்சியில் இருந்து இன்று பெண்களை கேவலமாக பேசிக் கொண்டு இருக்காங்க, அதை நீங்க ரசிச்சிட்டு இருக்கீங்க, உங்க கட்சி நிர்வாகிகளும் ரசிச்சிட்டு இருக்காங்க. இதோட நிறுத்திக்கோங்க. குஷ்பு பதில் கொடுத்தால் உங்களால் தாங்க முடியாது. திருப்பி அடிக்கும் தைரியம் எனக்கு இருக்கு. உங்களைப் போன்று பத்து பேர் என் பின்னாடி வர மாட்டாங்க, நான் ஒருத்தி போதும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலினை விளாசியுள்ளார்

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Khushbu criticized MKStalin and DMK


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->