எஸ்.டி மக்களை ஏமாற்ற துடிக்கும் பாஜக.!! காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு.!! - Seithipunal
Seithipunal


மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக அரசு பழங்குடியின மக்கள் குறித்து எதுவும் யோசிக்காத நிலையில் தற்போது தேர்தல் நேரத்தில் அவர்கள் நினைவுக்கு வந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். 

அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நேரத்தில் வழங்கியுள்ள மக்கள் பாஜகவின் நினைவுக்கு வந்துள்ளனர் நான் பாஜக விட மூன்று கேள்விகள் கேட்க வேண்டும்.

முதலாவது 2013ம் ஆண்டை ஒப்பிடுகையில் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் 48.15% அதிகரித்துள்ளது ஏன்?

வன உரிமைச் சட்டம் 2006ல் அமல்படுத்துவதில் பாஜகவின் இரட்டை என்ஜின் அரசாங்கம் தோல்வி அடைந்தது ஏன்?

இன்று மோடி அறிவித்திருக்கும் திட்டத்திற்கு முன்பு வரை பழங்களுடைய நலத்துறை அமைச்சகத்தால் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக செலவிடப்படும் தொகை தொடர்ந்து குறைந்து வந்தது ஏன்?

பழங்குடியின மக்கள் மேம்பாட்டிற்கு செயல்படும் தொகை 2018-2019 ஆம் ஆண்டில் 250 கோடி ரூபாயில் இருந்த நிலையில் 2022-2023 ஆம் ஆண்டில் 6.48 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. மோடி அரசாங்கம் தேர்தல் நேரத்தில் பழைய திட்டங்களுக்கு பெயர் மாற்றி அறிமுகப்படுத்துவதன் மூலம் பழங்குடியின மக்களை ஏமாற்று முயற்சிக்கிறது. 

வனம் மற்றும் பழங்குடியின கலாச்சாரத்தை பாதுகாப்பது நமது கடமையாகும். பழங்குடியின சமூகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்" என கார்கே தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kharge alleged BJP trying cheat tribunal for election


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->