கடையை மூட சொல்லி மிரட்டிய இஸ்லாமிய அமைப்பினருக்கு தர்ம அடி! என்ஐஏ சோதனை விவகாரம்! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நடத்திய முழு அடைப்பு போராட்டத்தில் ஏற்பட்ட கலவர தொடர்பாக 900 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் 400 பேரை தடுப்பு காவலில் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

கேரளாவில் அரசு, தனியார் பேருந்து மீது கல்வீசிய சம்பவம், ஆர்எஸ்எஸ், பாஜக அலுவலகங்கள் மீது தாக்குதல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது, தடியடி நடத்தி விரட்டிய போலீசார், 900 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

மேலும், வணிக வளங்களை கட்டாயப்படுத்தி மூடச்சொன்ன பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களை, வணிக நிறுவன ஊழியர்களும், கடை ஊழியர்களும் சேர்ந்து கொண்டு அடித்து விரட்டிய சம்பவமும் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

இது மட்டுமல்லாமல் பேருந்துகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீச திட்டமிட்ட நபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். கோழிக்கோடு, கொச்சி, கொல்லம், ஆலப்புழா, கண்ணூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கல் வீச்சு சம்பவங்களில் 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் திருவனந்தபுரத்தில் ஆட்டோ, கார்கள் மீதும் கல் வீச்சு சம்பவங்கள் அரங்கேறியிருப்பது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KERALA PFI PROTEST FOR NIA


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->