முன்னாள் அமைச்சர் காலமானார்.. சோகத்தில் அரசியல் கட்சியினர்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சருமான கே கே ராமச்சந்திரன் காலமானார்

கேரள மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கே கே ராமச்சந்திரன். கடந்த 1991 ஆம் ஆண்டிலிருந்து கல்பேட்டா தொகுதியில் தொடர்ந்து 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1995 ஆம் ஆண்டு ஏ.கே. அந்தோணி தலைமையிலான  அமைச்சரவையில் உணவு மற்றும் குடிமை பொருள் வினியோக அமைச்சராக இருந்தார்.

கடந்த 2004ஆம் ஆண்டில் உம்மன் சாண்டி அமைச்சரவையில் சுகாதார துறை அமைச்சராகவும்  பணியாற்றியுள்ளார். அதன் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கே கே ராமச்சந்திரன் உடல்நிலை குறைவால், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி கே கே ராமச்சந்திரன் உயிரிழந்தார்.  அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala ex minister kk ramachandran passed away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->