ஆட்சிக்கு வந்து ரூ.2 லட்சம் கோடி கடன் வாங்கிய திமுக அரசு - முன்னாள் அமைச்சர் பகீர்! - Seithipunal
Seithipunal


ஆட்சிக்கு வந்து ரூ.2 லட்சம் கோடி திமுக அரசு கடன் வாங்கி உள்ளதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்வதாக உறுதியளித்து மாணவர்களையும், இளைஞர்களையும் திசைதிருப்பி வாக்குகளை பெற்று நாடகம் என்றும், குற்றுசட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்த 18 மாதங்களில் தி.மு.க அரசு ரூ.2 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது என்றும், தி.மு.க அரசு கடன் வாங்கிய அந்த பணத்திலாவது சொத்து வரியை குறைக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று, கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக, விழுப்புரம் விக்கிரவாண்டி பேருந்து நிலையம் முன்பு திமுக அரசை கண்டித்து அ.தி.மு.கவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி., "அ.தி.மு.க ஆட்சியில் குறைந்த விலையில் கொடுக்க முடிந்த சிமெண்டை, தி.மு.க அரசால் ஏன் கொடுக்க முடியவில்லை? மணல் கொள்ளையை தடுக்க செல்லும் அதிகாரிகளின் நிலை பரிதாபமாக உள்ளது.

மக்களுக்காக ஸ்டாலின் என்ன செய்தார்? வாக்களித்த மக்கள் குறித்து ஸ்டாலின் நினைத்துக் கூட பார்க்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதி குறித்து கேள்வி கேட்டால் கேலி, கிண்டலாக தி.மு.க அரசு பேசி வருகிறது. 26% கமிஷன் தான் தி.மு.க ஆட்சி, எங்கு திரும்பினாலும் கமிஷன், கரப்ஷன் தான்" என்று சி.வி.சண்முகம் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KC Veeramani Say about DMK Govt


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->