காலையில் கைதான கே.சி.பழனிசாமி.. மாலையில் நீதிமன்றம் அளித்த உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி இன்று அதிகாலை திடீரென வரத்து வீட்டில் கைது செய்யப்பட்டார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை நான்கு மணிக்கு சூலூரை காவல் நிலையத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட காவலர்கள் கோவையில் உள்ள அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையின் முடிவில் கே.சி.பழனிச்சாமியை கைது செய்த காவல்துறையினர், சூலூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் அதிமுதவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி, தான் தற்போது அதிமுகவில் இணைந்து விட்டதாக கூறி, அதிமுகவின் முன்னணி  தலைவர்கள் பலரை விமர்சித்து பேசியதாக சூலூரைச் சேர்ந்த முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி மன்றத் தலைவரான கந்தவேல் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இந்த கைது செய்தனர்.

இந்நிலையில், கே.சி.பழனிசாமி சூலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கே.சி.பழனிசாமிக்கு பிப். 7ம் தேதி வரை நீதிமன்ற காவல் என உத்தரவிட்டார். நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை அடுத்து கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kc palanisamy in jail


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->