#இந்தியா || ஹிஜாப் அணியாத பள்ளி மாணவியின் தலையை வெட்டுவோம் என்றவருக்கு, சிறப்பான பதிலடி கொடுத்த மாணவி.! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் பகுதியை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி, தனது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால், அவரின் தலையை வெட்டுவோம் என்று, மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர் அரூசா பர்வேஸ். இவர் 12 ஆம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்கள் பெற்று, காஷ்மீர்  மாநிலத்திலேயே முதல் இடத்தை பிடித்திருந்தார்.

இதனையடுத்து இவருடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. அந்த புகைப்படத்தில் அவர் இஸ்லாமிய உடையான ஹிஜாப் அணிய வில்லை. இதனால் ஹிஜாப் அணியாமல் புகைப்படம் வெளியிட்டதற்கு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இதுகுறித்து இஸ்லாமியர் ஒருவரின் பதிவில், "கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாபுக்காக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் காஷ்மீரை சேர்ந்த நமது சகோதரி முகத்தை கொண்டு மறைக்காமல் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை நாம் அனுமதிக்க முடியாது. அடுத்த முறை இவ்வாறு புகைபடத்தை வெளியிட்டால், அவரின் தலையை வெட்டுவோம்" என்று கொலை மிரட்டல் விடுத்து பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பையும் ,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த கொலை மிரட்டல் தொடர்பாக மாணவி அரூசா பர்வேஸ் தெரிவிக்கையில், "ஹிஜாப் அணிவதும், அணியாமல் இருப்பதும் ஒருவரின் மதத்தின் மீதான நம்பிக்கையை வரையருக்காது.

அவர்கள் என்னை சமூக வலைத்தளங்களில் செய்யும் விமர்சனங்களை விட., அல்லாஹ்வை நான் அதிகம் நேசிக்கிறேன். நான் ஒரு இஸ்லாமிய பெண் என் இதயத்தால்., ஹிஜாப் மூலம் அல்ல" என்று அந்த மாணவி அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kashmiri student threatened for hijab


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->