காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து.. அமித்ஷா அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புக்காக தீடீரென 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அமர்நாத் யாத்திரை, மச்சாயில் மாதா யாத்திரை யாத்திரைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், சுற்றளவுக்காக ஜம்மு காஷ்மீர் வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்தார். இதையடுத்து சுமார் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேறியுள்ளனர்.

இதற்கிடையே, நேற்று காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் என 7 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரில் நிலவி வரும் பதற்றம் தொடர்பாக டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகல் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உள்துறை செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

பரபரப்பான சூழலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கின. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் முக்கிய முடிவை அறிவித்தார் அமித்ஷா.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து. சட்டப்பிரிவு 370, 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kashmir issue amit shah new announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->