கரூர் கூட்ட நெரிசல் பரபரப்பு! 41 உயிரிழப்புக்குப் பின்னணி! த.வெ.க.க்கு அங்கீகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் விளக்கம்
Karur stampede stirs up panic Behind 41 death Election Commission clarifies that TDP not recognized
கரூரில் கடந்த மாதம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் தலைமையிலான தேர்தல் பிரசார கூட்டம் பெரும் திரளான நெரிசலால் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது.மேலும், விபத்து குறித்து பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அரசு தரப்பில், “விஜய் கூட்டத்துக்கு தாமதமாக வந்ததே நெரிசலுக்கும் உயிரிழப்பிற்கும் முக்கிய காரணம்” என்று தெரிவிக்கப்படுகிறது.அதேசமயம், த.வெ.க. மற்றும் எதிர்க்கட்சிகள், “கூட்டத்திற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை; கட்சியினர் கேட்ட இடம் வழங்கப்படவில்லை” என்பதையே காரணமாக சுட்டிக்காட்டினர்.இந்த பெரும் விபத்து இந்தியாவையே அதிர்ச்சியடையச் செய்தது.
வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு (CBI)க்கு மாற்றி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இதனிடையே, இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, ஒரு வழக்கறிஞர் “தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணையின்போது, இந்திய தேர்தல் ஆணையம் திடீர் விளக்கமொன்றை வழங்கியது.“தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) இன்னும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல,” என தெரிவித்துள்ளது.இச்சம்பவம் மாநில அரசியல் சூழ்நிலையை மீண்டும் பரபரப்பாக்கியுள்ளது.
English Summary
Karur stampede stirs up panic Behind 41 death Election Commission clarifies that TDP not recognized