"கொலைவெறியில் இருக்காங்க".. பயந்து ஓடிட்டாரு.. அண்ணாமலையை விளாசிய ஜோதிமணி.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் கரூர் தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அத்தகுதியில் மீண்டும் ஜோதிமணி போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் ஜோதிமணி வேடசந்தூர் பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜோதிமணியை எதிர்த்து பாஜக வேட்பாளர் களம் இறக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அண்ணாமலை பயந்து ஓடிட்டாரு.!!

அதற்கு பதில் அளித்த ஜோதிமணி "பாஜகவை எல்லாம் ஒரு பொருட்டா நினைக்க சொல்றீங்க... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கரூர் நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்தவர்.. பாஜகவும், நரேந்திர மோடியும் ஆகா ஓகோன்னு இருக்காங்கனா... கரூர் மக்களுக்கு ஏதாவது செஞ்சிருக்காங்கன்னா.. கரூர் தொகுதியில் போட்டியிட வேண்டியது தானே? எதுக்கு கோயம்புத்தூர் ஓடுகிறாரு.. இந்த வெற்றி பெற முடியாதுன்னு அவருக்கே தெரியுது. 

பாஜக ஒரு பொருட்டே இல்ல.!!

அதனால பாஜகவை ஒரு பொருட்டாவே நினைக்க தேவையில்லை. கரூர்ல என்ன நடக்கும்னு சொன்னேனோ...  அதேதான் கோயம்புத்தூரில் நடக்கும். தமிழ்நாட்டு மக்கள் நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிராக கொலை வெறியோடு இருக்காங்க.. வெள்ளம், புயல் வரும் போது மக்கள் தண்ணீரிலும், கண்ணீரிலும் தத்தளிக்கும் போது தமிழக முதல்வர் தங்களுக்கு சேர வேண்டிய வரிப்பணத்தை கொடுங்கன்னு கேட்கும் போது தரவில்லை. 

இப்ப பிரதமருக்கு என்ன வேலை?

அப்போது மக்களை காண வராத பிரதமர் நரேந்திர மோடி இப்போ எதற்கு 5 முறை தமிழகம் வருகிறார். பாஜக தேர்தலை சந்திப்பதால் அவர் தற்போது தமிழக வருகிறார்.. தமிழ்நாட்டு மக்கள் கஷ்டப்படும்போது வராத பிரதமருக்கு இப்போது என்ன வேலை. எத்தனை முறை வந்தாலும் பாஜகவுக்கு இங்கு எதுவும் நடக்கப்போவதில்லை" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Congress candidate jothimani criticized annamalai bjp


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->