அட்டகத்தி பா ரஞ்சித் பிரச்சாரம் செய்த வேட்பாளரின் நிலை என்ன?! அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது! - Seithipunal
Seithipunal


கர்நாடக சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட்ட இந்தியக் குடியரசு கட்சியின் வேட்பாளர் எஸ்.ராஜேந்திரனுக்கு, அட்டகத்தி பட இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். 

இந்தியக் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜேந்திரன், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கோலார் தங்கவயல் தொகுதியில் தமிழில் பேசி பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதற்கிடையே படப்பிடிப்புக்கு சென்ற இயக்குநர் பா.ரஞ்சித், எஸ்.ராஜேந்திரனை நேரில் சந்தித்து தனது ஆதரவு தெரிவித்து, சில இடஙக்ளில் பிரச்சாரமும் மேற்கொண்டார். 

இந்நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி கேஜிஎஃப் தொகுதியில் எஸ்.ராஜேந்திரன் 3வது இடம் பிடித்து தோல்வியடைந்துள்ளார்.

இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபா கலா 81 ஆயிரம் வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றார்.

இரண்டாவது இடத்தில் பாஜக வேட்பாளர் அஸ்வினி சம்பங்கி 31 ஆயிரம் வாக்குகளை பெற்றார். ராஜேந்திரன் 29 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாவது இடம் பிடித்தார்.

மேலும் இந்த தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர், மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் நோட்டாவை விட குறைந்த வாக்குகளையே பெற்று தோல்வி அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Election Result KGF Pa Ranjith


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->