பாஜக வேட்பாளர்களுக்கு பணம் கடத்தி செல்கிறார் அண்ணாமலை - தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் தரப்பில் புகார்! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது தனது அதிகார பலத்தை செலுத்தியதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது கர்நாடக காங்கிரஸ் தரப்பில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள அந்த புகார் மனுவில், "கர்நாடகாவில் முன்பு போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, தற்போது பாஜகவின் நட்சத்திர தேர்தல் பரப்புரையாளாக, பேச்சாளராக வளம் வந்து கொண்டு இருக்கிறார்.

முன்பு போலீஸ் அதிகாரியாக அண்ணாமலை பணியாற்றிய போது, அவரது கீழ் பணிபுரிந்த பல காவல்துறை அதிகாரிகளும், அவரது பல தொகுதி தோழர்களும் தேர்தல் நடத்துவது தொடர்பான முக்கியமான பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். 

அண்ணாமலை இவர்களை பயன்படுத்தி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தி வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கின்றன.

எனவே, அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு புறம்பானது. அவர் தேர்தல் நிர்வாக இயந்திரங்களை தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

மேலும், அண்ணாமலை தனது நட்சத்திர பிரச்சாரகர் பதவியை தவறாகப் பயன்படுத்தி கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு ஆட்கள் மற்றும் பணத்தை கொண்டு செல்கிறார் என்பது நம்பத்தகுந்த தகவல். 

அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் காவல்துறை மற்றும் மற்ற தேர்தல் பணியாளர்கள் மத்தியில் அடையாளம் உள்ளதால், அவரது வாகனங்கள் சோதனையிடப்படவே இல்லை. 

அவருக்கு எதிராக யாரவது நடக்க முயன்றால், வருமான வரித்துறை சோதனை நடத்தப்படும் என்று மிரட்டி வருவதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. 

எனவே அவருக்கு வழங்ப்பட்டுள்ள நட்சத்திர பிரச்சாரகர் பதவியை நீக்க வேண்டும்" என்று அந்த புகார் மனுவில் காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Congress complaint against Annamalai exerting influence election duty


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->