தமிழகம் வரும் பிரதமர் மோடி, கறுப்புக்கொடி - அந்தர்பல்டி அடித்து கனிமொழி பரபரப்பு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் ஆதரிக்காது என்று, திமுகவின் மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தமிழக அரசு அழைத்ததன் பேரில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் வருகிறார்.

மேலும் அன்றைய தினம் மதுரையில் பாஜக சார்பாக நடைபெறக்கூடிய பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கலந்து கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கும் பொங்கல் விழாவிற்கு 'மோடி பொங்கல்' என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் வரும்போது எல்லாம் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்த திராவிட முன்னேற்றக் கழகம், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போது பிரதமர் நரேந்திர மோடியை சிவப்பு கம்பளம் இ ட்டு வரவேற்பது சர்ச்சை ஆகியுள்ளது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு அவர் அளித்த பதிலில்,

"பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்பது தமிழக அரசின் கடமையாகும். மக்களுக்கு எதிரான திட்டங்களை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். தமிழகத்தில் திருவிழாக்கள் நடைபெறவில்லை என்றால் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு வழிவகை செய்யவேண்டும்" என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KANIMOZHI SAY ABOUT GO BACK MODI


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->