#JustIn : "மாபெரும் தலைவரின் மகனாக, தொண்டனாக‌" மு.க.ஸ்டாலின் குறித்து கமலஹாசன் பெருமிதம்.! - Seithipunal
Seithipunal


மார்ச் 1-ம் தேதியான நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கின்றார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் பல்வேறு கொண்டாட்ட விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் புகைப்பட கண்காட்சியை நடிகர் கமலஹாசன் துவங்கி வைத்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் காரணமாக சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்னும் தலைப்பில் இந்த கண்காட்சி நடைபெறுகின்றது.

இதில் பங்கேற்றுள்ள மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வருகை பதிவேட்டில், "மாபெரும் தலைவரின் மகனாக, தொண்டனாக இருக்கின்ற சந்தோஷத்தையும், சவாலையும் அனுபவித்து ஏற்றவர். அவரின் படிப்படியான உயர்வுகளை படம் பிடிக்க வேண்டியது சரித்திர அவசியம்.- நன்றி.!" என்று கையெழுத்திட்டுள்ளார். 

கமலஹாசன் கையெழுத்துட்டுள்ள இந்த வருகை பதிவேட்டின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகின்றது. ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ்- திமுகவுடன் கூட்டணி அமைத்ததில் இருந்து கமலஹாசன் திமுகவுடன் தனது நெருக்கத்தை அதிகரித்துள்ளார் என்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamalhassan Signature of Photography Exhibition entry Note viral


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->