விஜயை அரசியலுக்கு வர சொன்னது நான் தான் - பொதுவெளியில் போட்டுடைத்த கமல்ஹாசன்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் "உலக நாயகன்" என்று பலராலும் அழைக்கப்படும் கமல்ஹாசன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் சூட்டினார். இந்த நிலையில், கமல்ஹாசன் கட்சித் தொடங்கி தற்போது 7 ஆணடுகள் ஆகியதால் அதற்காக விழா கொண்டாடப்பட்டது. 

அந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், "நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அவ்வளவு சீக்கிரம் அரசியலில் இருந்து போக மாட்டேன். மத்திய அரசு தென் மாநிலங்களை சிதைத்து வருவதை கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேலும், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பற்றி பேசிய கமலஹாசன், விஜய் அரசியலுக்கு வருமாறு முதலில் அழைத்தது நான் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். விஜய் முழு நேர அரசியல்வாதியாக பயணிப்பார்.

என்னால் முழுநேர அரசியல்வாதியாக இயங்க முடியாது. அது என்னுடைய ஸ்டைல் என்றுத் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக சினிமா படப்பிடிப்புகள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்று பிஸியாக இருந்த கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை ஒட்டி அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamalhaasan speech 7th year celebration function


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->