நான் காந்தியின் கொள்ளுப் பேரன்..!! செங்கோட்டையில் பொங்கிய கமல்ஹாசன்..!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் இன்று டெல்லியை அடைந்துள்ளது. இன்று நடைபெற்ற பேரணியில் மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுடன் அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் டெல்லி செங்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமலஹாசன் பேசியதாவது "நான் தமிழில் பேச வேண்டும் என ராகுல் காந்தி என்னை கேட்டுக் கொண்டார். இது இரண்டு கொள்ளுப் பேரன்கள் சேர்ந்து நடத்தும் ஒற்றுமை யாத்திரை. ராகுல் காந்தி நேருவின் கொள்ளுப் பேரன், நான் காந்தியின் கொள்ளுப் பேரன். எங்களின் கொள்கையில் மாற்றம் இருந்தாலும் தேச ஒற்றுமைக்காக யாத்திரையில் பங்கேற்று உள்ளேன்.

நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எந்த ஒரு நெருக்கடி வந்தாலும் நான் தெருவில் இறங்கி போராடுவேன். எந்த கட்சி ஆட்சி செய்கிறது என்ற கவலை எனக்கு இல்லை.

நான் முதலில் ஆங்கிலத்தில் தான் பேச வந்தேன் ஆனால் சகோதரர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதால் தமிழில் பேசுகிறேன். நான் யாத்திரையில் பங்கேற்க போவதாக அறிவித்தவுடன் பலர் நீங்கள் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்பதால் இந்த யாத்திரையில் கலந்து கொள்ள கூடாது. உங்கள் அரசியல் வாழ்க்கையை பாழாக்கி விடும் என அறிவுரை வழங்கினர். என்னுடைய அரசியல் வாழ்க்கை என்பது இந்த நாட்டிற்குரியது எனக்கானது அல்ல" என உணர்ச்சி பொங்க பேசினார். இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறும் என்பது இந்த யாத்திரை பயணத்தின் மூலம் உறுதியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Hassan said I am the great grandson of Gandhi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->