ரிமோட்டால் அடித்து டிவியை உடைத்தது ஏன்? கமலஹாசனின் தடாலடி விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு தொகுதி கூட வழங்காமல் இதயத்தில் இடம் வழங்கிய திமுக எதிர்வரும் மாநிலங்களவை தேர்தலில் ஒரு சீட் வழங்குவதாக உறுதி அளத்தது. 

இதனை ஏற்றுக் கொண்ட நாடு இயற்கை கமலஹாசன் எதிரில் ஒரு மக்களவை பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி அதிகரித்து அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார். 

இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யக் கட்சி ஆலோசனை கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என கமலஹாசன் அறிவித்தார். ஆனால் கமலஹாசனின் கூட்டணி முடிவால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் எட்டிப் பார்க்கவில்லை. 

இதன் காரணமாக ஆலோசனை கூட்டம் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் தலைமையில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் "திமுக கூட்டணி ஆதரித்து 30 தொகுதிகளில் நேரடியாக பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். 

மோடி பிரதமர் என்பதற்காக அவருக்கு தலை வணங்குவேன் தவிர தன்மானத்தை விட்டு தலை வணங்க மாட்டேன். எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து சாதியம்தான் எனக்கான எதிரி. யார் விலங்கிடப்பட்டிருக்கிறார்கள் என தெரிய வேண்டும் எனில் சாதிய கணக்கெடுப்பு அவசியம். திமுகவை விமர்சித்து ரிமோட்டை தூக்கி போட்டு டிவியை உடைத்து விட்டு இப்போது கூட்டணியா என கேட்கிறார்கள். 

நமது டிவி.. நமது ரிமோட்.. அது இங்குதான் இருக்கும் எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம். டிவிக்கான கரண்ட் ரிமோட்டுக்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள் தான் நமக்கு முக்கியம். மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது தியாகம் அல்ல வியூகம்" என புதுமையான தடாலடி விளக்கத்தை அளித்துள்ளார் நடிகர் கமலஹாசன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Hassan explain why broken tv with remote


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->