திமுக - மநீம கூட்டணி குறித்து.. ஓபனாக கமலஹாசன் கொடுத்த ஸ்டேட்மென்ட்.!  - Seithipunal
Seithipunal


மார்ச் 1-ம் தேதியான நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்த நாளை கொண்டாட இருக்கின்றார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல கொண்டாட்ட விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் புகைப்பட கண்காட்சியை நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டு இன்று துவங்கி வைத்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்ற தலைப்பில் இந்த புகைப்பட கண்காட்சி நடைபெறுகின்றது.

இந்த புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசனிடம் திமுகவுடனான  கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், "திமுகவுடன் கூட்டணியா என்பது பற்றி எல்லாம் இப்போது கூற முடியாது. கதை சீன் பை சீனாகத்தான் நகர வேண்டும். உடனே கிளைமாக்ஸுக்கு போக வேண்டும். என்றால் எப்படி?." என்று வேடிக்கையாக பதில் அளித்து இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal about Mnm and Dmk Coalition


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->