பொன்முடி வழக்கை நானே விசாரிப்பேன்! நீதிபதியின் பளீச் பதிலால் கலக்கத்தில் திமுக! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மீது 20 இரண்டாம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. 

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் பொன்முடியும், அவருடைய மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் இதுவரை மேல்முறையீடு செய்யாததால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடிவு செய்து அதன் மீது பதில் அளிக்கும்படி பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தது. 

ஒரு வழக்கை தாமாக முன்வந்து விசாரணை எடுத்துக் கொண்டால் அந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வேறு ஒரு நீதிபதி அமர்வின் முன்பு தான் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். இந்த வழக்கை நீங்கள் விசாரிக்க கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பிலும் அமைச்சர் பொன்முடி தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதன் மீது இன்று உத்தரவு பிறப்பதாக ஆனந்த் வெங்கடேஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இந்த வழக்கில் விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலக முடியாது என்றும், இந்த வழக்கை நானே தொடர்ந்து விசாரிப்பதாகவும் கூறி இந்த வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்ற வழக்கறிஞர் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் இணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு காரணம் இந்த வழக்கை விழுப்புரத்திலிருந்து வேலூருக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் பதிவுத்துறை கேட்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

அதற்கு இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிமன்ற பதிவுத்துறையின் வாதம் கேட்கப்படும், அப்போது அவர்கள் இணைக்கப்படுவார்கள் என்று கூறி வழக்கில் விசாரணை அக்டோபர் 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அமர்வில் பல அமைச்சர்களின் மறு ஆய்வு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நீதிபதியின் இந்த உத்தரவு திமுகவினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Justice Anand Venkatesh said he will investigate Ponmudi case


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->