நரேந்திர மோடியை முந்திய ஜே.பி நட்டா.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் பாதையாத்திரை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

சுமார் 200 தொகுதிகளை கடந்துள்ள அவரது பாதயாத்திரை வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதயாத்திரையின் இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாகவும், அதற்காக அவர் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்பாக அண்ணாமலையின் பாதயாத்திரை 200 தொகுதிகளை கடந்ததையொட்டி பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா தமிழகம் வர உள்ளார்.

வரும் பிப்ரவரி 11ஆம் தேதி சென்னை வரும் அவர் அண்ணாமலையின் பாதயாத்திரையில் கலந்து கொள்வதோடு பொதுக் கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JP natta visit tamilnadu before Narendra Modi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->