'என் விருப்பத்த நிறைவேற்றுங்க' உதயநிதிக்கு கோரிக்கை வைத்த இசைஞானி.!  - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சராக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மகனும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பு மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும், திமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் நடிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், "மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களே! உங்களுக்கு நீங்கள் இந்த பதவியேற்கின்ற நாளிலே நான் வாழ்த்துவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. 

"ஈன்ற பொழுதினும் பெரிதென்பது தன் மகனை சான்றோன் எனக் கேட்டதாய்." என்று வள்ளுவர் சொன்னதைப் போல நீங்கள் பதவியேற்பது உங்கள் தாய்க்கு தான் ரொம்ப சந்தோஷமா இருக்கும். அதை வள்ளுவர் வந்து ரொம்ப அழகா சொல்லி இருக்காரு. உங்க அம்மாவுக்கு வந்து எவ்வளவு சந்தோஷமா இருக்கும் என்பதை நான் நினைத்து பார்க்கிறேன் நான். 

நீங்கள் வந்து நல்ல முறையில் ஜனங்களுக்கு சேவை செய்வதற்காக அமைச்சர் பதவி ஏற்கும் பொழுது பொறுப்பு ஜாஸ்தியாகிறது. இந்த பொறுப்பை வந்து சரிவர நிறைவேற்றி மக்களிடம் நல்ல பெயரும் புகழும் அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். கண்டிப்பாக நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன். நன்றி வணக்கம்." என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Isaingani Elayaraja Request to Minister Udhayanithi Stalin


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->