ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்தது எப்படி? வெளியான அதிர்ச்சி செய்தி.! - Seithipunal
Seithipunal


உக்ரைனில் ரஷ்ய நடத்தி வரும் தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.

உக்ரைன் - ரஷ்ய போர் நிறுத்தம் குறித்து நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மீண்டும் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

அதே சமயத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இணைவதற்கான விண்ணப்பத்தை உக்ரைன் நாடு கொடுத்திருப்பது, ரஷ்யாவை மேலும் கோபமடைய செய்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக ஆறாவது நாளாக இன்று போர் உச்சம் அடைந்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ரஷ்யா தனது வான்வெளி தாக்குதலை சற்று முன்பு தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், உக்ரைனின் கார்கிவ் நகரில் நடந்த ரஷ்ய தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்துள்ளார். 

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள செய்தியில், 

"இன்று காலை கார்கிவ் நகரில் ஷெல் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். அவரது குடும்பத்தினருடன் அமைச்சகம் தொடர்பில் உள்ளது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே வெளியான தகவலின்படி, மருத்துவ படிப்பில் நான்காம் ஆண்டு படித்துவரும் மாணவர் நவீன், இன்று காலை கார்கிவ்  நகரில் இருந்து வெளியேறுவதற்காக ரயில் நிலையம் செல்லும் போது, ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலில் மாணவர் நவீன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian student naveen dead in ukraine


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->