இஸ்லாமியர்களை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபடும் அபாயம் உள்ளது – முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய சிறுபான்மையினரை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபடும் அபாயம் உள்ளது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் தறுபௌதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார் பிரதமர் மோடி. அங்கு 23-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 

பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அமெரிக்காவின் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவிடம், நீங்கள் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினால் என்ன சொல்வீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பிரதமர் மோடியுடன் தான் உரையாடியிருந்தால், இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை தாங்கள் பாதுகாக்கவில்லை என்று கூறியிருப்பேன் என தெரிவித்தார்.

மேலும் இஸ்லாமிய சிறுபான்மையினரை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபட  அதிகம் வாய்ப்புள்ளதாக உள்ளது என்று கூறினார். மேலும் பிரதமர் மோடியை சந்திக்கும் அதிபர் பைடன், இந்தியாவில் இஸ்லாமிய சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும் என்று ஓபாமா வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India risks division if Muslims are not respected Former US President Obama


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->