உயிரை காவு வாங்கிய பாகிஸ்தான்.! உடனே உதவிய இந்தியாவின் பெருந்தன்மை.! - Seithipunal
Seithipunal


முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் காம்பீரின்  பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமியின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார்.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒமைமா அலி என்ற சிறுமி இந்தியாவிற்கு வந்து மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள உதவுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முகமது யூசுப், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரிடம் செல்போன் மூலமாக கோரிக்கை வைத்துள்ளார். 

இதையடுத்து முகமது  யூசுப் கோரிக்கையை மத்திய வெளியுறவு துறை அமைச்சரான ஜெய் சங்கர் கவனத்துக்கு காம்பீர் கொண்டு சென்றுள்ளார்.  இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட அமைச்சர் ஜெய்சங்கர், சிறுமிக்கும் சிறுமியின் பெற்றோருக்கும் மருத்துவ விசா வழங்கமாறு ஏற்பாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் சிறுமிக்கு விசா கிடைத்தது, தன் கோரிக்கையை ஏற்று சிறுமிக்கு விசா வழங்கிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமானகாம்பீர் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் இருவர் உயிரிழந்தனர். இப்படி தொடர்ந்து அத்து மீறி தாக்குதல் நடத்தி இந்தியா ராணுவ உயிரை காவு வாங்கிய பாகிஸ்தானுக்கு உதவும் இந்தியாவை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india helps to pakistan child


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->