நான்கு எம்.எல்.ஏக்கள் திடீர் மறைமுக ராஜினாமா.. இன்று வெளியாகும் பெயர் லிஸ்ட்.. பரபரப்பான அரசியல் வட்டாரங்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக முதலமைச்சர் விஜய் ரூபாணி தலைமையிலான ஆட்சியானது நடைபெற்று வருகிறது. இம்மாநில மாநிலங்களவைக்கு 4 எம்.பிக்களை தேர்தெடுக்க வரும் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்க்காக 3 இடங்களுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் 2 இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் நான்கு பேர் தங்களின் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இவர்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி ஏற்றுக்கொண்ட நிலையில், பதவி விலகிய எம்.எல்.ஏக்களின் பெயர்களை பிப்ரவரி 16 ஆம் தேதியான இன்று சட்டசபையில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பலமானது சட்டசபையில் 74 ஆக இருந்தது, 69 ஆக குறைந்துள்ளது. ஏற்கனவே மத்திய பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 22 பேர் ராஜினாமா செய்த அதிருப்தியில் கட்சி தலைமை இருந்து வரும் நிலையில், குஜராத்தில் நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை மீண்டும் அளித்துள்ளது.

குஜராத் சட்டசபையுடைய மொத்த இடமாக 182 இடங்கள் உள்ள நிலையில், இரண்டு இடம் காலியாகவே இருக்கிறது. இந்த நேரத்தில், காங்கிரசின் பலம் 4 குறைந்துள்ள நிலையில், சட்டசபையின் பலமும் 176 ஆக குறைந்துள்ளது. பாஜகவிடம் ஏற்கனவே 103 இடங்கள் உள்ள நிலையில், குறைந்தது 3 இடங்களை கைப்பற்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Gujarat 4 MLA resign post today release name list by Assembly speaker


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->