கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த முரளிதர ராவ்.. பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை பாஜகவின் தேசிய செயலாளர் முரளிதரராவ் சந்தித்தார்.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்று வருவதாகவும், இதற்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது, மக்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருவதாகவும் கூறினார்.

நாளை முன்னணி தலைவர்கள் நாடு முழுவதும் இதுகுறித்து பல்வேறு இடங்களில் பேச உள்ளதாகவும் கூறினார். தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொய்யான தகவல்களை சொல்லி வருகின்றனர். தற்போது நாங்கள் கூறுகிறோம் இந்த குடியுரிமை சட்ட திருத்தம் இந்தியாவில் உள்ள எந்த ஒரு மக்களையும் பாதிக்காது.

பொது மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் எதற்காகவும் வருந்த தேவை இல்லை. ஆனால் இங்கு உள்ள எதிர்கட்சி தலைவர்கள் பொதுமக்களிடையே பொய்யான கருத்துகளை தெரிவித்து வருகின்றன. இந்த போராட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டு வருவது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றும், குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து விவாதிக்க ஸ்டாலின் தயாரா? என்றும், அதற்கு பதில் அளிக்க நாங்கள் தாயார் என்றும் கூறினார். 

மேலும் துரைமுருகன் சட்டமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் யாரையும் பாதிக்காது என்று ஒத்துகொண்டு உள்ளார். என்.ஆர்.சி. எந்த ஒரு பொதுமக்களையும் பாதிக்காது, அசாம் மாநிலத்தில் தவிர வேறு எந்த மாநிலத்திலும் என்.ஆர்.சி. அமல்படுத்த படாது என்றும்., எனவே இல்லாத ஒரு கருத்தை கூற வேண்டாம் என்றும் கூறினார்.

என்.பி.ஆர். 2010 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது என்றும், என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி. இரண்டிற்கும் எந்த ஒரு சம்மந்தம் இல்லை என்றும்., மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் தொடர்ந்து பிஜேபி வளர்ந்து வருகிறது, உள்ளாட்சி தேர்தலில் அதனை நிரூபித்து உள்ளதாகவும்., பிஜேபி தமிழகத்தில் இல்லை என்று அவர்கள் கூறி வந்த நிலையில் தற்போது அனைத்து கிராம புறங்களிலும் பிஜேபி வந்துள்ளது.

தமிழகமும் தமிழகத்தின் கலாச்சாரமும் பிஜேபி அரசு மத்திய அரசாக இருக்கின்ற நிலையில் தொடர்ந்து வளர்த்து வருவதாகவும்., மாநில அரசாக வந்தால் தமிழக கலாச்சாரத்தை காப்போம் என்றும் கூறினார். இன்னும் நான்கு நாட்களில் பிஜேபி கட்சியின் மாவட்ட தலைவர் தேர்ந்தெடுக்க உள்ளதாகவும்., அதன் பின்பு ஒரு வாரத்தில் தமிழக தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai bjp national member press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->