எதிர்க்கட்சியில் இணையப் போகும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளி.! அதிர்ச்சியில் காங்கிரஸ்.!! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. 403 தொகுதிகளை கொண்ட, உத்தர பிரதேசத்தில்  7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களத்தில் உள்ளது. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கட்சி மாறி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவரான இம்ரான் மசூத், சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. 

இது குறித்து இம்ரான் மசூத் கூறியதாவது, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக - சமாஜ்வாதி கட்சி இடையே நேரடி மோதல் உள்ளது. எனவே ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்திய பின்னர் அகிலேஷ் யாதவை சந்திக்க நேரம் கேட்பேன் என தெரிவித்துள்ளார். அகிலேஷ் யாதவை நாளை நேரில் சந்தித்து இம்ரான் மசூத் சமாஜ்வாதி கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

imran masood may be join in samajwadi party


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->