23 வயதில் நூறு கோடி சொத்து., வசமாக சிக்கிய பிரபல முன்னாள் அமைச்சரின் மகள்! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக தற்போது முன்னாள் அமைச்சர் சிவக்குமார் உள்ளார். சமீபத்தில் வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா பணப்பரிமாற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறையினர் சிவக்குமாரை கைது செய்தனர். 

இந்நிலையில், சிவகுமார் மகள் ஐஸ்வர்யாவுக்கு 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் எப்படி வந்தன என சந்தேகத்தின் பேரில் அவரை விசாரணைக்கு அமலாக்கத்துறை அழைத்திருந்தது. இந்த விசாரணைக்காக டெல்லி வந்த ஐஸ்வர்யா, நேற்று அமலாக்கத்துறையில் நேரில் ஆஜரானார். அவரிடம் சிங்கப்பூரில் செய்த முதலீடுகள் பற்றி விரிவான வாக்குமூலம் பெற்ற அதிகாரிகள், சொத்து தொடர்பான முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். 

கர்நாடகாவில் சிவக்குமார் அறக்கட்டளை நடத்தி வருகிறார் இந்த அறக்கட்டளையின் மேற்பார்வையாளராக ஐஸ்வர்யா உள்ளார். இந்த அறக்கட்டளைக்கு சொந்தமாக கல்வி நிறுவனங்களும், கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துகளும் உள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டில் 1 கோடி ரூபாய்  மதிப்புடைய சொத்துகள்தான் ஐஸ்வர்யா பெயரில் இருந்தன. 

இந்நிலையில், 2017 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்ற சிவக்குமார் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா அங்கே ஏராளமான முதலீடுகளை செய்ததாகவும், அங்கிருந்து முறைகேடான வழியில் இந்தியாவில் தங்களது சொத்துகளை மேலும் அதிகரித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் சிவகுமாரின் குடும்பமே விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hundred crore assert for minister daughter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->