புள்ளி வைத்த ஸ்டாலின், கோலம் போடும் எச்.ராஜா.! எந்த பக்கம் போனாலும் அணை கட்டுறாங்களே.?!  - Seithipunal
Seithipunal


பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் திமுகவின் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். 

மத்தியில் ஆளும் பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டு இருக்கும் குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி மற்றும் என்பிஆர் போன்றவற்றினை எதிர்த்து தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருக்கின்றன. 

இந்த இயக்கத்தின் மூலம் பெறப்படும் கையழுத்துக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி குடியுரிமை சட்டம் குறித்த எதிர்ப்பை பதிவு செய்து முறையிட போவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. 

இந்த நிலையில், தமிழக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா  எதிர்கட்சிகளின் இந்த கையெழுத்து இயக்கத்தை வரவேற்பதாக ட்விட்டரில் ” சிஏஏ விற்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் சேர்ந்து கையொப்பம் இடுபவர்களது பெயர் வெளிவரும் போது நாட்டின் எதிரிகள் யார் என்பது வெளிப்பட்டு விடும். அதுவும் நல்லது தானே. எனவே அதை நான் வரவேற்கிறேன்.” என பதிவிட்டுள்ளார். எந்த பக்கம் போனாலும் அணை கட்டுறாங்களே.?! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H.raja tweet about dmk activity


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->