ஐயோ! ஜி.எஸ்.டி. குறைப்பு பேச்சா...? விளைவு எங்கே...? -பெ.சண்முகத்தின் கேள்வி
GST reduction talk Where result Shanmughams question
கடந்த 22-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. (GST) சீர்திருத்தம், நாட்டின் வரி அமைப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் முன்னர் இருந்த 4 அடுக்கு வரி முறை எளிமைப்படுத்தப்பட்டு, தற்போது 5% மற்றும் 18% என்ற 2 விகிதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் “பொருட்களின் விலை குறைந்து விட்டது” என பாஜகவினர் மக்களிடம் பெருமையாக விளம்பரப்படுத்தி வருகின்றனர். ஆனால், விலை குறைப்பு உண்மையிலேயே நடந்ததா? எனும் கேள்வியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தீவிரமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் (X) பதிவில் கடும் விமர்சனத்துடன் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.அதில்“ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பால் மக்கள் கையில் பணம் புரளும், விலைவாசி குறையும் என்று பிரதமரும் நிதி அமைச்சரும் பெருமையாக சொன்னார்கள்.
ஆனால், அது சொல்லி 10 நாட்கள் ஆனாலும், எந்த பொருட்களின் விலை குறைந்தது? மக்கள் கையில் எந்தப் பணம் புரளுகிறது?” என்று குறிப்பிட்டார்.அவரது கேள்வி, மத்திய அரசை நேரடியாகச் சுட்டும் வகையில் பரவலாக பேசப்படுகிறது.
English Summary
GST reduction talk Where result Shanmughams question