அரசின் திட்டங்களுக்கான விளம்பரங்களை தாங்கிய பேருந்துகள்.. இன்று முதல் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


அரசு பள்ளிகளில் +2 வரை படித்துவிட்டு கல்லூரிகளில் உயர்கல்வியில் சேருகின்ற மாணவிகளுக்கு மாதம் ₹.1000 வழங்கும் திட்டம், சமீபத்த்தில் அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தின்கீழ் 93,000 மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் பலன் பெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தின் துவக்க விழாவானது வட சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இத்திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி அளிக்கப்படும்.

2022-23 பட்ஜெட் கூட்டத்தொடரில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், தமிழக அரசால், 698 கோடி ரூபாய் செலவில், இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இந்த திட்டத்தின் தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டம் மற்றும் காலை உணவுத் திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து விளம்பரப்படுத்தப்பட்ட பேருந்துகள் சென்னையில் இன்று முதல் இயக்கப்படவுள்ளது. அத்துடன், தொடர்ந்து தமிழக அரசுடைய மற்ற துறைச் சார்ந்த திட்டங்கள் பற்றி விளம்பரப்படுத்த முடிவெடுக்கப்பட்டு இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt scheme Ad in Govt Bus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->