"ஆதரவு அளித்த அண்ணன் திருமாவளவனுக்கு நன்றி" - நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்..!! - Seithipunal
Seithipunal


நடிகை காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பாஜகவிலிருந்து ஆறு மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த காயத்ரி ரகுராம் வேறு கட்சிகளில் சேர அழைத்தால் பரிசீலிப்பேன் என தெரிவித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வரும் அவர் அண்ணாமலைக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் விசிக தலைவர் திருமாவளவனை சென்னையில் உள்ள அம்பேத்கர் திடலில் நேற்று திடீரென சந்தித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் "எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது. விசிக தலைவர் எம்.பி அண்ணா தொல்.திருமாவளவன் அவர்களுக்கும் விசிகவுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி. மரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு இது" என பதிவிட்டுள்ளார். கடந்த காலங்களில் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொண்ட நிலையில் திடீரென சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gayatri Raghuram tweet thank you brother Thirumavalavan for his support


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->