நாட்டைக் காப்பாற்ற எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும் - பரூக் அப்துல்லா.! - Seithipunal
Seithipunal


நாட்டைக் காப்பாற்ற எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் சேர வேண்டும் என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள மாநில கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்து வருகிறது.

 இது பாஜகவை எதிர்த்து ஒன்று சேர்வது அல்ல. நாட்டை காப்பாற்ற எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரள வேண்டும். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. இது தான் நான் ஒவ்வொருவருக்கும் கூறும் செய்தி. இந்த தன்மையை நாம் அனைவரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும் இது நமது நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கும்.

அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டியது அவசியம். எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு முன்னாள் பிரதமர் தேவகவுடாவை  அழைப்பது முக்கியம். காஷ்மீரில் தேர்தல் நடைபெற வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடைபெறவேண்டியது முக்கியமானது. காஷ்மீரில் தேர்தலை நடத்த மறுப்பது ஏன் அங்கு தேர்தல் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது தேர்தல் கட்டாயம் நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையமே தெரிவித்துள்ளது.

 இந்தியா நம் அனைவருக்கும் சொந்தமானது நீங்கள் முஸ்லிமாக இருந்தாலும் சரி இந்து, கிறிஸ்தவர், சீக்கியராக இருந்தாலும் சரி நாம் அனைவரும் ஒன்றே அது இந்தியர் தான். ஆனால் ஒரு சில திரைப்படங்கள் மக்களை பிளவுபடுத்த பயன்படுத்தப்படுகின்றன இதை செய்கிறவர்கள் நாட்டுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farooq Abdullah speech about parliment election alliance


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->