பாஜகவிடம் சீட் வாங்கி "அதிக விலைக்கு" விற்கிறார்.. வாசனை சாடிய முன்னாள் எம்எல்ஏ.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி ஈரோடு தொகுதியில் விஜயகுமார் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபாலு களமிறங்க உள்ள நிலையில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து விஜயசீலன் களமிறக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன கதிர்வேல் கட்சியிலிருந்து திடீரென விலகி உள்ளார். எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்து காத்து இருந்த கதிர்வேலுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சிய நிலையில் அவர் கட்சியிலிருந்து விலகி உள‌்ளார்.

அதுமட்டுமின்றி பாஜக கூட்டணியில் சீட்டு வாங்கிக் கொண்டு அதனை அதிக விலைக்கு ஜி கே வாசன் விற்று வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex MLA kathirvel alleged on GKVasan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->