ஆர்டர் கொடுத்த எடப்பாடி.. தடாலடியாக தயாராகும் படைகள்..!! - Seithipunal
Seithipunal


சென்னை வானகரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டமானது நேற்று நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு., இலங்கை தமிழர்கள் சம உரிமை., மருத்துவ பட்ட மேற்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு., இருமொழிக் கொள்கை., மாநில சுயாட்சி போன்ற 23 தீர்மானங்கள் தீர்மானங்கள் அதிரடியாக நிறைவேற்றப்பட்டது. 

பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமி உள்ளாட்சித் தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்துக் கொண்டார். நமது கட்சியின் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய பொருளாளரும்., துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். 

o paneer selvam, OPS,

அதிமுகவின் வங்கி கணக்கில் ரூ.226 கோடியே 90 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும்., கட்சிகளின் விதிகளில் மாற்றம் செய்ய கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியாக 5 வருடங்கள் உறுப்பினராக இருக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்., பழைய விதியின்படி இணை ஒருங்கிணைப்பாளராக போட்டியிட 5 வருடங்கள் உறுப்பினராக இருக்கவேண்டும் என்பது திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அமைப்பு ரீதியாக 56 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eps speech about to start next election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->