#BigBreaking :: அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.. அங்கீகாரம் வழங்கியது இந்திய சட்ட ஆணையம்..!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக பொதுக்குழு மூலம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதார்வாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். இதனை அடுத்து பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொது குழு செல்லும் என தீர்ப்பளித்தது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்கை அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் இபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்தனர். அதனை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. அதன் அடிப்படையில் இபிஎஸ் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக கருதப்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற கொள்கையின் அடிப்படையில் தேர்தலை நடத்தும் முயற்சியில் செயல்பட்டு வருகிறது. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்க மத்திய சட்டத்துறை சார்பில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

அதன்படி அதிமுகவுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடி கே பழனிச்சாமிக்கு இந்திய சட்ட ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இக்கடிதத்தின் அடிப்படையில் இந்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS recognized as general Secretary of AIADMK by Law Commission


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->