ஜாபர் சாதிக் கைது எதிரொலி... தமிழக ஆளுநரை‌‌ சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.!! - Seithipunal
Seithipunal


மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் போதைப்பொருள் விற்ற பணத்தில் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்த நிலையில் தன் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கும் போதே, 3 ஆண்டுகளாக போதைப்பொருள் மாபியா நடத்தி வந்த ஜாபர் சாதிக்கை பிடிக்காமல் விட்டதோடு அல்லாமல், அவனுக்கு திமுகவில் கட்சி அங்கீகாரமும் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பதவி விலக வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருந்தார்.

 மேலுிம்  ளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமுகவலைதள பக்கத்தில் பதிவிட்டு பின்பு நீக்கம் செய்யப்பட்ட பதிவுகளில் இருந்தே ஜாபர் சாதிக்குடன் நெருக்கம் காட்டியது தெரியவருவதால், அதை சார்ந்த செய்திகள் தொடர்ந்து வெளிவருவதால், தார்மீக பொறுப்பேற்று இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ளார். போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைதான நிலையில் முதலமைச்சர் குடும்பத்துடன் அவருக்கு இருந்த தொடர்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் ஆர்.என் ரவியுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS meet governor Ravi regards jaffar Sadiq arrest


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->