கார்ப்பரேட் கம்பெனி நடத்தும் திமுக...!! கும்பகர்ண தூக்கத்திலிருந்து எழ வேண்டும்..!! - Seithipunal
Seithipunal


திமுக அரசு கோவை மாவட்டத்தை புறக்கணிப்பதால் கோவையில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெறும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவித்திருந்தார் . இந்த போராட்டத்தை தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் ஆஇஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி கோவை சிவானந்தா காலனி பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அப்போது பேசிய அவர் "திமுக அரசு அதிமுக கொண்டு வந்த திட்டங்களை கைவிட்டு வருகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தாவது திமுக அரசு கும்பகர்ண தூக்கத்திலிருந்து எழுந்து மக்களுக்கான நன்மையினை செய்ய வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு ஒரு முதல்வரின் ஆட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக என்னுடைய ஆட்சியை சொல்கிறார். 

ஆனால் ஒரு ஆட்சி எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு கடந்த 18 மாதங்களாக நடக்கும் திமுகவின் ஆட்சியை சான்று. திமுக ஆட்சியில் மக்கள் என்ன பலன் கண்டார்கள் என தெரியவில்லை. தமிழகத்தில் இன்று ஒரு குடும்ப ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கார்ப்பரேட் கம்பெனி தமிழகத்ததில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

அதை மறந்து முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அவர் வழியில் என்னுடைய தலைமையில் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு தந்திருக்கிறேன். அதிமுகவை குறை சொல்ல ஒரு தகுதி வேண்டும்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS critized DMK should wake up from its corporate regime


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->