எச்சரிக்கை விடுக்கும் எடப்பாடி.! கொந்தளிப்பில் டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


தஞ்சையில் வடக்கு வீதி காளி கோயில் அருகே மறைந்த முதல்வரும், அதிமுகவின் தலைவருமான எம்ஜிஆர்-ன் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர். அவர்களின் சிலை உடைக்கப்பட்டதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள கண்டன செய்தியில்,

"ஏழை எளியோர் பசி தீர்த்த வள்ளல், தமிழக மக்கள் இதயங்களில் என்றென்றும் நீங்கா புகழ் கொண்டிருக்கும் இதயக்கனி  எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலை தஞ்சை வடக்கு வீதியில் சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

புரட்சித்தலைவர் அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும்,பொது அமைதியை சீர்குலைக்கவும் நினைப்போர் மீது மிகக்கடுமையாக சட்டநடவடிக்கை எடுக்க இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன்.மேலும் இத்தகைய விஷமச்செயல்கள் இனியும் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன்" என்று எடப்பாடி கே பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதேபோல், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள கண்டன செய்தியில், "தஞ்சாவூரில் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர். அவர்களின் சிலை உடைக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. 

இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தலைவர்களின் சிலைகள் தொடர்ந்து இப்படி இழிவுபடுத்தப்படுவது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்." என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே எம்.ஜி.ஆர். அவர்களின் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக சேகர் என்பவர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps condemned for MGR Statue Damage


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->