பணமோசடி வழக்கில் திமுக அமைச்சரின் சொத்துக்கள் முடக்கம்.! அதிரடி காட்டும் அமலாக்கத்துறை.! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.

பண மோசடி வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட பதினெட்டு சொத்துக்களை முடக்கி அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை தற்போது மேற்கொண்டுள்ளது.

கடந்த 2001 முதல் 2006ம் ஆண்டு காலகட்டத்தில் அதிமுகவில் அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தபோது, 4 கோடியே 90 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தனர்.

அந்த வழக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தும் அமலாக்கத் துறைக்கு சென்றது. இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி, கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. 

மேலும் அவர் குடும்பத்தினர் 7 பேருக்கும் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த விசாரணைக்கு பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

அந்த வழக்கு பதிவுவை தொடர்ந்து, தற்போது அவருடைய 18 அசையா சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், ஏற்கனவே அவர் மீது நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Enforcement has frozen the assets of DMK Minister Anita Radhakrishnan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->