#சற்றுமுன் || பண மோசடி வழக்கில் ஆளும் கட்சி அமைச்சரை கைதுசெய்த மத்திய அமலாக்கத்துறை.! - Seithipunal
Seithipunal


பண மோசடி வழக்கில் மகாராஷ்டிரா மாநில அமைச்சர், சற்று முன்பு மத்திய அமலாக்கத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அமலாக்கத் துறை போலீசார் இன்று மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக்கை கைது செய்துள்ளனர். நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தொடர்புடைய பணமோசடி வழக்கில் தற்போது மாலிக்கை மத்திய அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

இந்த காலை அமைச்சர் நவாப் மாலிக் வீட்டுக்கு சென்ற மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். 

மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்திய பிறகு, அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டத்தை சேர்ந்தவர்கள், மும்பையில் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது தொடர்பான பணப்பரிவர்த்தனைகளில் நவாப் மாலிக்-க்கு தொடர்பு இருக்கிறது என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Enforcement Directorate arrests Maharashtra Minister Nawab Malik


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->