அதிக தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றாலும்! காங்கிரஸின் இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லையே! - Seithipunal
Seithipunal


இந்திய முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டுவருகிறது வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

குறிப்பாக வடமாநிலங்களில் அக்கட்சி அதிக இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தற்போது வரை பாஜக தலைமையிலான கூட்டணி 335 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

காங்கிரஸ் கூட்டணி 95 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் முன்னிலையில் உள்ளனர்.

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்னடைவை சந்தித்துள்ளார் இது காங்கிரஸ் தொண்டர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது, ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணி 335 தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது

இதுவரை இந்தியாவில் நடந்த மக்களவை தேர்தலில் 1984 நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் 414 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெருபான்மை பெற்று ராஜிவ் காந்தி பிரதமரானார். அதன் பின்னர் எந்த தேர்தலிலும்  தனிப்பெருபான்மை பெற்று எந்த கட்சியும் ஆட்சி அமையாத இருந்த நிலையில், 2014 மக்களவை தேர்தலில் பாஜக 282 தொகுதிகளில் வெற்றி பெற்று பெற்று மோடி பிரதமரானார், தற்போது 2014 தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெருபான்மை  ஆட்சியை பிடிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இருந்தாலும் 414 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ்  சாதனையை பாஜகவால் முறியடிக்க முடியவில்லை 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election result


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->