குடியரசு துணைத் தலைவா் தோ்தல் : பாஜக வேட்பாளருக்கு ஒடிசா முதலமைச்சர் ஆதரவு.! - Seithipunal
Seithipunal


பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஜகதீப் தன்கருக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலை தொடர்ந்து, குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளரை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நேற்று அறிவித்தார்.

அதன்படி, மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த, நிலையில், பிஜு ஜனதா தள மூத்த தலைவா் பினாகி மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘‘ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்கிடம் பிரதமா் மோடி தொலைபேசியில் பேசினாா். அதனைத்தொடா்ந்து குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் ஜகதீப் தன்கரை ஆதரிக்க பிஜு ஜனதா தளம் தீா்மானித்துள்ளது’’ என்று தெரிவித்தாா்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election of Vice President of the Republic Odisha Chief Minister supports the BJP candidate


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->