#BREAKING: ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை... இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


அதிமுக சின்னம் மற்றும் வேட்பாளர் தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம்..!!

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தேர்வு தொடர்பான பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்ப கடிதத்துடன் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் ஆகியோர் இன்று பிற்பகல் 3 மணி அளவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து அறிக்கை சமர்ப்பித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நபரை அதிமுக வேட்பாளராக அறிவிப்பதுடன் இரட்டை இலை சின்னமும் ஒதுக்க வேண்டும் எனவும் அதற்கான அதிகாரத்தை அதிமுகவை தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வழங்குவதாகவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மற்றும் அக்கட்சி வேட்பாளருக்கு ஒப்புதல் அதிகாரம் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வழங்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதமானது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனை அடுத்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கே.எஸ் தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளார். இவர் நாளை பிற்பகல் 12 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Commission of India orders to give double leaf to EPS


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->