ஒரு அறிவிப்பால்.. தமிழக மக்களை உச்சி குளிர வைத்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. விவசாய பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.

மேட்டூர் அணையை திறந்துவைத்த பிறகு முதலமைச்சர் பழனிசாமி பேசியவை, மேட்டூர் அணை திறப்பு மூலம் டெல்டா பகுதியில் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். கால்வாய் பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.

இறைவன் அருளால் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். காவிரியின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது, மேலும் 3 தடுப்பணைகள் கட்டப்படும்.

பொதுப்பணித்துறை சொந்தமான 14 ஆயிரம் ஏரிகளும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான 39 ஆயிரம் குளம், குட்டைகள் தூர்வாரப்படும். கோதாவரி - காவிரி நதிகள் இணைக்கப்படுவது உறுதி என்று கூறினார்.

மேலும், மத்திய அரசின் உதவியுடன் டெல்டாவில் உள்ள அனைத்து கால்வாய்களும் கான்கிரீட் கால்வாய்களாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy says godavari cauvery link


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->