கால் நடை வளர்ப்பு என்பது சாதாரண விஷயமல்ல.,பால் விலை உயர்வுக்கு முதல்வர் விளக்கம்!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், பசுந்தீவனம் மற்றும் அதன்  இடுபொருட்களின் விலை கடந்த 4 ஆண்டுகளில் உயர்ந்துள்ளதால், உற்பத்தியாளர்க்களுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். 

பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களை கருத்தில் கொண்டு 4 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 28 ரூபாயிலிருந்து, 32 ரூபாயாகவும், அதாவது லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றிற்கு 35 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, அதாவது லிட்டர் ஒன்றிற்கு 6  ரூபாய் உயர்த்தப்படுகிறது.

அதேபோல், அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய்  உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது நாளை அமலுக்கு வருகிறது. 

இந்தநிலையில், பால் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பால் உற்பத்தியாளர்களின் பல சங்கங்கள் நஷ்டத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தீவிமாகப் பரிசீலித்து தான் பால் விலை உயர்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.மேலும் கால் நடை வளர்ப்பு என்பது சாதாரண விஷயமல்ல என முதல்வர் தெரிவித்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisami says about milk rate increase


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->