நாங்கள் சட்டமன்றம் வருவது இதற்கு தான்.! துரைமுருகன் ஓபன் டாக்.! - Seithipunal
Seithipunal


திமுக தமிழக அரசை குற்றம் குறை சொல்லவே சட்டமன்றம் வந்துள்ளதாகவும் பாராட்ட அல்ல என எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத் தொடரானது  கடந்த 6 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி, வருகின்ற 9 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. அதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்றை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், சட்டப்பேரவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் கிருஷ்ணசாமி தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கூறினார். இந்த குற்றம்சாட்டுக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிரிக் கட்சிகளாக குற்றம் குறை சொல்கிறார்களே தவிர பாராட்ட மனம் வரவில்லை என பேசினார்.  

அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சுக்கு பதிலளித்த துரைமுருகன், ஒரு முறை பேரறிஞர் அண்ணா உரையாற்றும் போது தாங்கள் ஆளும்கட்சிக்கு லாலி பாட வரவில்லை என்றும், அரசு எந்திரத்தில் உள்ள குற்றம் குறையை எடுத்து சொல்லவே வந்ததாகவும் கூறியதை சுட்டிக்காட்டினார்.

அப்போது அதே அண்ணா தான் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என கூறியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட, மல்லிகைக்கு மணம் இருந்தால் பரவாயில்லை என்றும் காய்ந்த பூவாக இருந்தால் என்ன செய்வது என துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan speech in tamilnadu assembly


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->